மோகன்லால் நடிக்கும் பரோஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
மலையாள திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் மோகன்லால் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் எம்புரான் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் பரோஸ் எனும் திரைப்படத்தை தானே தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார். இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து மாயா, குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ரபேல் அமர்ஹோ, ஸ்பானிஷ் நடிகை பாஸ்வேகா
ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய லிடியன் நாதஸ்வரம் இசையமைத்திருக்கிறார். மேலும் மார்க் கிலியன் பின்னணி இசை காண பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படமானது 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த படம் ஜிஜோ புன்னூஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து என்ற நாவலை மையப்படுத்தி வாஸ்கோடகாமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களை பாதுகாத்த பாதுகாவலர் பரோஸ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இந்த படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்தது இந்த படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் வைரலாகி வருகிறது.