Homeசெய்திகள்சினிமாமோகன்லால் நடித்துள்ள 'எம்புரான்'..... ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு?

மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’….. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு?

-

- Advertisement -

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக
தகவல் வெளியாகி உள்ளது.மோகன்லால் நடித்துள்ள 'எம்புரான்'..... ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு?

மலையாள சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் லூசிபர். இந்த படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. எனவே இப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணியில் லூசிபர் 2- எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து மஞ்சு வாரியர், அபிமன்யு சிங், டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், கிஷோர் குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.மோகன்லால் நடித்துள்ள 'எம்புரான்'..... ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு? லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் டீசரும், அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த படமானது வருகின்ற மார்ச் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வரும் என படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் படக்குழு சார்பில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ