Homeசெய்திகள்சினிமாமோகன்லால் நடிக்கும் 'வ்ருஷபா' .... ஷூட்டிங்கை நிறைவு செய்த படக்குழு!

மோகன்லால் நடிக்கும் ‘வ்ருஷபா’ …. ஷூட்டிங்கை நிறைவு செய்த படக்குழு!

-

- Advertisement -

மோகன்லால் நடிக்கும் வ்ருஷபா படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது.மோகன்லால் நடிக்கும் 'வ்ருஷபா' .... ஷூட்டிங்கை நிறைவு செய்த படக்குழு!

மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இவரது நடிப்பில் பரோஸ் எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள லூசிபர் 2 – எம்புரான் திரைப்படம் 2025 மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.மோகன்லால் நடிக்கும் 'வ்ருஷபா' .... ஷூட்டிங்கை நிறைவு செய்த படக்குழு! இதற்கிடையில் இவர், வ்ருஷபா எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படத்தை நந்தா கிஷோர் எழுதி, இயக்குகிறார். இப்படத்தில் மோகன் லாலுடன் இணைந்து ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகினி திவேதி, நேகா சக்ஸேனா மற்றும் பலர் நடிக்கின்றனர். பான் இந்திய அளவில் உருவாகும் இந்த படமானது அப்பா – மகன் உறவை மையமாக வைத்து உருவாகி வருகிறது.மோகன்லால் நடிக்கும் 'வ்ருஷபா' .... ஷூட்டிங்கை நிறைவு செய்த படக்குழு! அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மோகன்லால் நடிக்கும் 'வ்ருஷபா' .... ஷூட்டிங்கை நிறைவு செய்த படக்குழு!மேலும் வ்ருஷபா திரைப்படத்தை 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ