த்ரிஷ்யம் 3 படம் குறித்து நடிகர் மோகன்லால் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் பரோஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து 2025 மார்ச் 27 அன்று மோகன்லால், பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் லூசிபர் 2 – எம்புரான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகின்றன. இதற்கிடையில் இவர் வ்ருஷபா எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் ராம் போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் மோகன்லால். இந்நிலையில் அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம் 3 திரைப்படம் உருவாக இருக்கிறது.
கடந்த 2013ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான படம் தான் த்ரிஷ்யம். விறுவிறுப்பான திரைக்கதையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இப்படமானது தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் பின்னர் 2021 இல் த்ரிஷ்யம் 2 திரைப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றன. அடுத்தது த்ரிஷ்யம் 3 திரைப்படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இப்படமானது பான் இந்திய அளவில் உருவாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
The Past Never Stays Silent
Drishyam 3 Confirmed!#Drishyam3 pic.twitter.com/xZ8R7N82un
— Mohanlal (@Mohanlal) February 20, 2025
தற்போது இந்த படம் தொடர்பாக நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதள பக்கத்தில், “கடந்த காலம் அமைதியாக இருக்காது. த்ரிஷ்யம் 3 உறுதி” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் லாலேட்டன் த்ரிஷ்யம் 3 படத்திற்காக தயாராகி வருகிறார் என்று சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.