எம்புரான் படத்திற்கு கிடைத்த ஓபனிங் குறித்து மோகன்லால் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரோஸ் எனும் திரைப்படம் வெளியானது. மேலும் வ்ருஷபா, ராம் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள மோகன்லால் த்ரிஷ்யம் 3 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் பிரித்விராஜ் இயக்கத்தில், எம்புரான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பான் இந்திய அளவில் உருவாகி இருந்த இந்த படம் நேற்று (மார்ச் 27) உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து டோவினோ தாமஸ் , மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், சுராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். தீபக் தேவ் இதற்கு இசையமைக்க சுஜித் வாசுதேவி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
We made history! Biggest opening ever for a Malayalam movie. Our heartfelt gratitude to each of you for making this happen.#L2E #Empuraan in theatres now! pic.twitter.com/iN2bdhZz1E
— Mohanlal (@Mohanlal) March 28, 2025
இருப்பினும் கடந்த 2019ல் வெளியான லூசிபர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. அதன்படி இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.65 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பல சாதனைகளை முறியடித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நாங்கள் வரலாறு படைத்து விட்டோம். மலையாள சினிமா வரலாற்றில் எம்புரான் படத்திற்கு தான் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. இது நடக்க காரணமாக இருந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.