Homeசெய்திகள்சினிமாமோகன்லாலின் ஹை பட்ஜெட் பான் இந்தியா படம்..... ஷூட்டிங்கை தொடங்கிய படக்குழு!

மோகன்லாலின் ஹை பட்ஜெட் பான் இந்தியா படம்….. ஷூட்டிங்கை தொடங்கிய படக்குழு!

-

மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மோகன்லால் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மோகன்லால் ஒரு புதிய பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார். ‘வ்ருஷபா‘ என்று படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நந்தா கிஷோர் இயக்குகிறார்.

ஏ வி எஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் வியாஸ், பிரவீர் சிங் சியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் மோகன் லால் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மோகன்லாலின் மகனாக தெலுங்கு நடிகர் ரோஷன் மேகா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து சிம்ரன், ஷனன்யா கபூர், ஷாரா கான், ஸ்ரீகாந்த் மேகா, ராகினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹை பட்ஜெட்டில் ஒரு எப்பிக் ஆக்ஷன் என்டர்டெய்னர் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கப்பட்டுள்ளது.இப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது.
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கிறது.

MUST READ