Homeசெய்திகள்சினிமாமோகன்லால் இயக்கி நடிக்கும் 'பரோஸ்'.... புதிய போஸ்டர் வெளியீடு!

மோகன்லால் இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’…. புதிய போஸ்டர் வெளியீடு!

-

மோகன்லால் இயக்கி நடிக்கும் பரோஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.மோகன்லால் இயக்கி நடிக்கும் 'பரோஸ்'.... புதிய போஸ்டர் வெளியீடு!

மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் மோகன் லால் தற்போது எம்புரான் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அடுத்தது மம்மூட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் மோகன்லால். இதற்கிடையில் இவர் பரோஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார். அதாவது இது மோகன்லால் இயக்கும் முதல் படமாகும்.
இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து மாயா, உன்னி முகுந்தன், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லிடியன் நாதஸ்வரம் இதற்கு இசை அமைக்க சந்தோஷ் சிவன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படம் ஜிஜோ எழுதிய நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. மோகன்லால் இயக்கி நடிக்கும் 'பரோஸ்'.... புதிய போஸ்டர் வெளியீடு!மேலும் இப்ப படமானது வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதன்படி தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ