Homeசெய்திகள்சினிமாமோகன்லாலின் 'பரோஸ்' பட டிரெய்லர் ரிலீஸ் தேதி இதுதானா?

மோகன்லாலின் ‘பரோஸ்’ பட டிரெய்லர் ரிலீஸ் தேதி இதுதானா?

-

மோகன்லால் நடிக்கும் பரோஸ் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.மோகன்லாலின் 'பரோஸ்' பட டிரெய்லர் ரிலீஸ் தேதி இதுதானா?மலையாளத்தில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் மோகன்லால் கடைசியாக நேரு, மலைக்கோட்டை வாலிபன் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதே சமயம் இவர் எம்புரான், ராம், வ்ருஷபா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் மோகன்லால், ஜில்லா படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் விஜயுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் இவர் பரோஸ் எனும் திரைப்படத்தை தானே தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார். இந்த படமானது ஜிஜோ புன்னூஸ் எழுதிய நாவலை மையப்படுத்தி வாஸ்கோடகாமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களை பாதுகாத்த பாதுகாவலர் பரோஸ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மோகன்லாலின் 'பரோஸ்' பட டிரெய்லர் ரிலீஸ் தேதி இதுதானா?இந்த படத்தில் மோகன்லால் தவிர மாயா, கல்லிரோய், சீசர் ராடன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 3D தொழில்நுட்பத்தில் இந்த படம் பான் இந்திய அளவில் உருவாகி இருக்கிறது. லிடியன் நாதஸ்வரம் இந்த படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் சிவன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது செப்டம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் 2024 செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ