Homeசெய்திகள்சினிமா9 மாத கருவுடன் ரேம்ப் வாக் சென்ற நடிகை அமலா பால்

9 மாத கருவுடன் ரேம்ப் வாக் சென்ற நடிகை அமலா பால்

-

9 மாத கருவுடன் ரேம்ப் வாக் சென்ற நடிகை அமலாபாலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமலா பால் தமிழ்சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். இத்திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு, அமலா பால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மைனா. பிரபு சாலமன் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு தான், அமலா பாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தொடர்ந்து விஜய், தனுஷ், அதர்வா, சூர்யா, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் என கோலிவுட்டின் அனைத்து சூப்பர் ஹீரோக்களுடன் கூட்டணி அமைத்து நடித்தார். அனைத்து படங்களும் ஹிட் அடித்தன. இதனிடையே அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குநர் ஏ.எல். விஜய்யை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். அண்மையில், தனது நீண்ட நாள் காதலன் ஜெகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

காதலர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொள்ளும்போதே, அமலா பால் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அமலா பால், 9 மாத கர்ப்பமாக உள்ளார். அவர் தொடர்ந்து தனது கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது, கேரள மாநிலம் கொச்சியில் கர்ப்பிணிகளுக்கான ஆடை அணிவகுப்பு நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் நடிகை அமலா பாலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரேம்ப் வாக் மேற்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ