Homeசெய்திகள்சினிமாதமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

-

- Advertisement -

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்:

கிங்ஸ்டன்

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கமல் பிரகாஷ் இயக்கியிருந்த திரைப்படம் தான் கிங்ஸ்டன். இந்த படம் கடந்த மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற (ஏப்ரல் 13) ஜீ5 தளத்தில் நண்பகல் 12 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜென்டில்வுமன்

தமிழ் சினிமாவில் சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லிஜோ மோல். இவரது நடிப்பில் கடந்த மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் ஜென்டில்வுமன்.தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்! கள்ளக்காதல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி டென்ட் கொட்டா தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜோஸ்வா சேதுராமன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமகாதகி

பெப்பின் ராஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகி இருந்த எமகாதகி திரைப்படம் கடந்த மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!சூப்பர் நேச்சுரல் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ