இந்த வாரம்ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்:
சத்திய சோதனை
சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரேம்ஜி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் சத்திய சோதனை. இந்த படத்தை கடந்த 2017இல் வெளியான கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார். சுரேஷ் சங்கையா எட்டு வருடங்கள் கழித்து சத்திய சோதனை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரேம்ஜி, ரேஷ்மா பசிபுலேட்டி, ஸ்வயம் சித்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சூப்பர் டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர் வி சரண் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எம் ரகுராம் இதற்கு இசை அமைத்துள்ளார். கலகலப்பான காமெடி கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருந்தது. கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி சோனி லைவ் ஓ டி டி தளத்தில் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
புலிமடா
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள திரைப்படம் தான் புலிமடா. இந்த படத்தை ஏ.கே. சாஜன் இயக்கியுள்ளார். இதில் ஜியோ பேபி, ஜானி ஆண்டனி, சோனா நாயர், அபு சலீம் மற்றும் பலர் நடித்துள்ளனர். சைக்காலஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை அப்பு பாத்து பப்பு ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
தி வில்லேஜ்
கடந்த 2021 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் தான் தி வில்லேஜ். இந்த வெப் தொடரில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த வெப் தொடர் சமிக் தாஸ்குப்தாவின் கிராபிக்ஸ் நாவலை தழுவி இயக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியாகும் முதல் கிராபிக்ஸ் நாவல் வெப் சீரிஸ் இதுதான்.இந்த வெப் சீரிஸில் ஆர்யாவுடன் இணைந்து திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், முத்துக்குமார், ஜான் கொக்கேன், ஜார்ஜ் மரியான் தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ சக்தி நிறுவனம் இந்த வெப் தொடரை தயாரித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் தொடரின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. மேலும் இந்த வெப் தொடர் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டீமன்
டீமன் படமானது பிரபல இயக்குனர் வசந்த பாலனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவானது. சச்சின், அபர்னதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஆனந்தகுமாரி இதற்கு ஒளிப்பதிவு செய்ய ரோனி ரபேல் இசை அமைத்திருந்தார். திகில் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி வெளியானது. தற்போதைய இப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
லியோ
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கூட்டணியில் வெளியான இந்தப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருந்தா இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா அர்ஜுன் சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தற்போது லியோ படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி இந்திய இந்திய அளவிலும் நவம்பர் 28ஆம் தேதி உலக அளவிலும் வெளியாக இருக்கிறது.