Homeசெய்திகள்சினிமாஇந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

-

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

கேப்டன் மில்லர்

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த படம் தான் கேப்டன் மில்லர். இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். கேப்டன் மில்லர்மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. அதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டூர் காரம்

மகேஷ் பாபு நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கியிருந்த படம் குண்டூர் காரம். இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!இருந்தபோதிலும் வசூலை வாரி குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில் குண்டூர் காரம் படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படிக்கு காதல்இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

பரத் நடிப்பில் உருவாகியுள்ள படம் இப்படிக்கு காதல். இந்த படத்தில் பரத் உடன் இணைந்து ஜனனி ஐயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

அயலான்

சிவகார்த்திகேயனின் 14 வது படமான அயலான் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. சயின்ஸ் பிக்சன் ஃபேண்டஸி கதை களத்தில் வெளியான இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!இந்நிலையில் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ