Homeசெய்திகள்சினிமாஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியின் 'மிஸ்டர் எக்ஸ்'..... ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியின் ‘மிஸ்டர் எக்ஸ்’….. ஷூட்டிங் அப்டேட்!

-

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து மிஸ்டர் எக்ஸ் என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து மஞ்சு வாரியர் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார்.

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கடேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் ஹை பட்ஜெட்டில் ஒரு பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் நேற்று படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

MUST READ