Homeசெய்திகள்சினிமா“தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும்னு சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன்”… கலகலப்பாக பேசிய யோகிபாபு!

“தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும்னு சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன்”… கலகலப்பாக பேசிய யோகிபாபு!

-

ஹரிஷ் கல்யாண், இவனா,யோகிபாபு மற்றும் நதியா ஆகியோர் நடிப்பில் எல்ஜிஎம்(LGM -Let’s Get Married) என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கிரிக்கெட் வீரன் தோனி தான் புதிதாக துவங்கியுள்ள தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். .
அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இந்த படத்தை இயக்கி இசையமைத்துள்ளார்.படத்தில் யோகிபாபுவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் தோணி மற்றும் சாக்ஷி இருவரும் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்வில் பேசிய யோகிபாபு,
“கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருக்கும் தோனி அவர்கள் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்தது பாராட்ட வேண்டியது. தோனி மற்றும் சாக்ஷி மேடத்துக்கு எனது நன்றி.
முதலில் இயக்குநர் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தான் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்ட போது எதோ கிண்டல் செய்கிறார் என்று நினைத்தேன். பின்னர் தான் அவர் சொல்வது உண்மை என்பதே தெரிந்தது.
படத்தில் நதியா மேடம், ஹரிஷ் கல்யாண் போன்றோர் நடிப்பதால் மூவருக்குமான காட்சிகளில் சேர்ந்து நடிக்கும் போது தேதிகளில் குழப்பம் ஏற்படும் என்னால் தேதி ஒதுக்க முடியுமா? என்று தெரியவில்லையே என்று சொன்னதற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, நீங்கள் இப்படத்தில் நடிக்கத் தேதி ஒதுக்கினால் நான் தோனி கையெழுத்துப் போட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை உங்களுக்கு வாங்கித் தருவேன் என்றார். நான் உடனே என் மேனேஜரைக் கூப்பிட்டு இவர் என்ன தேதி கேட்டாலும் கொடு என்று சொல்லிட்டேன்.
தோனி சார் ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸ் அடிப்பது போல் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
எங்கள் அனைவரையும் மிகச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டதோடு இயக்குநர் ரமேஷ் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்து சிறப்பாக கவனித்துக் கொண்ட தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்புக் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

MUST READ