Homeசெய்திகள்சினிமா“தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துள்ளது”… மனம் நெகிழ்வாக பேசிய தோணி!

“தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துள்ளது”… மனம் நெகிழ்வாக பேசிய தோணி!

-

தமிழ்நாடு என்னை தத்தெடுத்துள்ளது என்று தோணி பேசியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண், இவனா மற்றும் நதியா ஆகியோர் நடிப்பில் எல்ஜிஎம்(LGM -Let’s Get Married) என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் மகேந்திர சிங் தோணி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோணி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இந்த படத்தை இயக்கி இசையமைத்துள்ளார்.படத்தில் யோகிபாபுவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் தோணி மற்றும் சாக்ஷி இருவரும் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்வில் பேசிய தோணி,
“நான் என் மகளோடு அமர்ந்து இப்படத்தைப் பார்த்து விட்டேன்..அவள் என்னிடம் சில சந்தேகங்கள் கேட்டாள். அவளுக்கும் படம் பிடித்திருக்கிறது. சிறப்பாக உருவாகி இருக்கிறது. இது ஒரு ஜாலியான திரைப்படம்.
எனக்கு என் தயாரிப்பு குழுவைப் பார்க்கும் போது பலம் வருவது போல் உணர்கிறேன்..
இயக்குநர் இரமேஷ் தமிழ்மணியும் ஒரு கட்டிடக்கலை நிபுணர் தான். என் மனைவி என்னிடம் படத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்ன போது, நான் அவளிடம் சொன்னது ஒன்று தான். படத் தயாரிப்பு என்பது நீ நினைப்பது போல் வீட்டுச் சுவருக்கு பெயிண்ட் அடிக்கும் காரியமல்ல.
கதை என்ன, யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை நீயே முடிவு செய். இதைத் தயாரிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பின்னர் எதைப் பற்றியும் யோசிக்காதே, அந்த வேலையைத் தொடங்கிவிடு, மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று சொன்னேன். படக்குழுவினர் சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்திருப்பதற்கு அதுவும் முக்கியமான ஒரு காரணம்.
நான் என் குழுவினரிடம் ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கும்படி கூறினேன். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போதும் எதிர்பார்ப்பது நல்ல தரமான உணவு மட்டும் தான். அதுபோல நடிகர்களுக்கான உணவோ, அல்லது மொத்தப் படக்குழுவினருக்கான உணவோ, யாருக்கான உணவாக இருந்தாலும் அது உயர்தரமான உணவாக இருக்க வேண்டும் என்பது தான்.

எனக்கு விதியின் மீது நம்பிக்கை உண்டு. என்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் சென்னையில் தான், நான் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்ததும் சென்னையில் தான். நினைத்துப் பார்த்து சந்தோசப்படும் பல சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளது. தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் அரவணைப்பும் நம்பவே முடியாத ஒன்று. மேலும், தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துள்ளது. நான் செல்லும் இடமெல்லாம் CSK-வின் அன்பு என்னைத் தொடர்கிறது. இதெல்லாம் தான் இப்படத்தைத் தமிழில் தயாரிக்கக் காரணம்.” என்று பேசியுள்ளார்.

MUST READ