Homeசெய்திகள்சினிமாதோனியை சந்தித்து பேசிய அட்லீ... என்னவாக இருக்கும்?

தோனியை சந்தித்து பேசிய அட்லீ… என்னவாக இருக்கும்?

-

பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் தோனியை சந்தித்து பேசிய இயக்குநர் அட்லீ, அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்.

இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரரின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணத்தை ஒட்டி குஜராத்தின் ஜாம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு இருவரின் திருமணமும் நடைபெற உள்ளது. திருமணத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் ஜாம் நகரில் திருமண கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டன. அதன்படி விழாவில் இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

பாலிவுட்டில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அலியா பட், கரீனா கபூர், ரன்பீர் கபூர், ஸ்ரத்தா, ஆதித்யா ராய் கபூர், அனில் கபூர், அர்ஜூன் கபூர், அமிதாப் பச்சன் குடும்பத்தினர் என பலரும் பங்கேற்றனர். தென்னிந்திய திரையுலகில் இருந்து இயக்குநர் அட்லீ, பிரியா தம்பதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் கலந்து கொண்டனர். இது தவிர கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தோனி, உள்பட பலரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது கிரிக்கெட் நட்சத்திரம் எம்.எஸ்.தோனி இயக்குநர் அட்லீயை சந்தித்துபேசினார். இருவரும் பேசி முடித்துவிட்டு செல்பி எடுத்துக் கொண்டனர். குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ