டிமான்டி காலனி 2-ம் பாகத்தை பார்த்து நாங்களே பயந்துவிட்டோம் என படத்தின் இசை அமைப்பாளர் சாம் சி.எஸ். தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது டிமான்டி காலனி இரண்டாம் பாகம். இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார். அருள்நிதி நாயகனாக நடித்துள்ள நிலையில், பிரியா பவானிசங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடி்பபு கடந்த ஆண்டு தொடங்கியது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படம் குறித்து சாம் சிஎஸ் பேசியுள்ளார். “இந்தப்படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இறுதியாக படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார். டிமான்டி காலனி 2-ம் பாகத்தை பார்த்து நாங்களே பயந்துவிட்டோம். ரசிகர்களுக்கு இது ஒரு புது அனுபவத்தை அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.