தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் சாம் சி.எஸ். அந்த வகையில் இவர் ஓர் இரவு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள், கைதி, டிமான்ட்டி காலனி 2 ஆகிய வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்திலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான வணங்கான் திரைப்படத்திலும் பின்னணி இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தார் சாம் சி.எஸ். இவ்வாறு இவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய சாம் சி.எஸ் தனக்கும் ரஜினி படத்தில் பணியாற்ற ஆசை இருப்பதாக கூறியுள்ளார். “எனக்கு வாய்ப்பு கிடைக்கும் படங்கள் எல்லாம் க்ரைம் படங்களாக இருக்கிறது. கைதி படம் நல்ல படம் என்றாலும் அந்த படத்தில் பாடல்களே இல்லை. அடங்கமறு படத்தில் ஒரே ஒரு பாடல் இருந்தது. அது ஹிட் பாடல்.
“I’m always getting crime films, so I didn’t have scope to prove Song skills. So all used to tell, I’m good at composing BGM only🙁. I too have wish to do #Vijay sir, #Ajith sir & #Rajini sir films and want to work in Big films to prove myself🤞”
– #SamCSpic.twitter.com/kT0qRpfIAh— AmuthaBharathi (@CinemaWithAB) February 3, 2025
ஆகையினால் அனைவரும் நான் பின்னணி இசையில் வல்லவன் என்று கூறுகிறார்கள். ஆனாலும் மற்றவர்கள் விஜய், அஜித், ரஜினி படங்களில் ஏன் பணியாற்றவில்லை என்று தான் கேட்கிறார்கள். சின்னதாக வித்தியாசமாக செய்வது கூட யாருக்கு செய்கிறோம் என்பது முக்கியமாக இருக்கிறது. எனக்கும் பெரிய படங்களில் பணியாற்ற வேண்டும் என ஆசை இருக்கிறது. அதன் மூலம் நான் என்னை நிரூபிக்க அதில் புதுசாக நிறைய பண்ண முடியும் என தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.