சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடித்திருக்கின்றனர். கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு கதையாக உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில் இன்று (ஏப்ரல் 23) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன.
#SeanRoldan Recent Interview
– I have already decided that I want to sing the song #Aachaley in the movie #TouristFamily.
-U1 Sir, #SPCharan have sung a song in this film.
– I had already decided that all these people would sing in this film#Sasikumar
pic.twitter.com/uTTYJloKHk— Movie Tamil (@MovieTamil4) April 23, 2025
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “ஆச்சாலே பாடலை நான் தான் பாட வேண்டும் என ஏற்கனவே முடிவு பண்ணி இருந்தேன். இது தவிர எஸ்பி சரண் சார், யுவன் சார், விஜய் யேசுதாஸ் ஆகிய மூவரும் இந்த படத்தில் பாடல் பாடி இருக்கிறார்கள். இவங்க மூன்று பேரும் பாடி கண்டிப்பா கேட்டிருப்பீங்க. ஆனா இந்த படத்தில் அவர்கள் பாடியுள்ள ஒவ்வொரு பாடலும் மிகவும் ஸ்பெஷல் ஆனது” என்று தெரிவித்துள்ளார்.