Homeசெய்திகள்சினிமாஇசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்...... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்…… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

-

திரைத் துறையில் தனது தனித்துவமான இசையினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்...... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்! இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இளையராஜா போன்ற முக்கியமான இசையமைப்பாளர்களிடம் இவர் பணியாற்றி இருக்கிறார். 1980 கால கட்டங்களில் திரைத் துறையில் அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 225 க்கு மேலான படங்களில் பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த காலத்தில் ஏ ஆர் ரகுமான், இளையராஜா, தேவா போன்றவர்களின் வருகைக்குப் பிறகும் வித்தியாசாகரின் தனது தனித்துவமான இசையின் மூலம் உச்சம் தொட்டு நின்றவர்.இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்...... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!படையப்பா, சந்திரமுகி, அன்பே சிவம், ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் இவர் இசையமைத்திருந்த நிலையில் அப்பாடல்கள் பெரும்பாலானதை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக அன்பே சிவம் திரைப்படத்தில் யார் யார் சிவம் எனும் பாடல் இப்போது கேட்டாலும் கூட மெய் சிலிர்க்கும். இதுபோன்று பல மெலடி பாடல்களையும் தந்து ரசிகர்களின் நினைவுகளை தட்டி எழுப்பி அவர்களை குதூகலப்படுத்திய வித்யாசாகரை மெலோடி கிங் என்று ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதை அப்படியே தன் இசையின் மூலம் வெளிக் கொண்டு வந்து தன்னை யாராலும் வெல்ல முடியாது என்று நிரூபித்துக் காட்டி சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் வித்யாசாகர். இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்...... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!அதே சமயம் பல ஃபிலிம் ஃபேர் விருதுகளும் தேசிய விருதுகளும் இவரால் பெருமை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 30-க்கும் மேற்பட்ட புதிய பாடகர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் இவரையே சேரும். தற்போது வித்தியாசாகர், எழில் இயக்கத்தில் உருவாகி வரும் தேசிங்கு ராஜா 2 படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் தனது 61 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வித்தியாசாகருக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் பட்சத்தில் நாமும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம்.

MUST READ