Homeசெய்திகள்சினிமாஆபாச வீடியோவை வெளியிட்டது எனது முன்னாள் நண்பர்..... நடிகை ஓவியா குற்றச்சாட்டு!

ஆபாச வீடியோவை வெளியிட்டது எனது முன்னாள் நண்பர்….. நடிகை ஓவியா குற்றச்சாட்டு!

-

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் களவாணி, மதயானை கூட்டம், கலகலப்பு உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழ் தவிர மலையாளத்திலும் பணியாற்றி வருகிறார் ஓவியா. ஆபாச வீடியோவை வெளியிட்டது எனது முன்னாள் நண்பர்..... நடிகை ஓவியா குற்றச்சாட்டு!அந்த வகையில் இவர் தமிழில் கடைசியாக பூமர் அங்கிள் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை வைத்து அது ஓவியா தான் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஒரு சிலர் ஓவியாவிற்கு ஆதரவாகவும் வேறு சிலர் ஓவியாவிற்கு எதிராகவும் தங்களின் விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் ஓவியா எதிர்மறையான விமர்சனங்களுக்கு மிகவும் போல்டாக தரமான பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து நடிகை ஓவியா ஆபாச வீடியோ குறித்து கேரள போலீசில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியானது. ஆபாச வீடியோவை வெளியிட்டது எனது முன்னாள் நண்பர்..... நடிகை ஓவியா குற்றச்சாட்டு!அதன்படி போலீசார் நடவடிக்கை எடுத்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினர். இந்நிலையில் நடிகை ஓவியா, அந்த ஆபாச வீடியோவை வெளியிட்டது தனது முன்னாள் நண்பர் தாரிக் என்று குற்றம் சாட்டியுள்ளார். “தாரிக் என்பவரின் மோசமான நடவடிக்கையை புரிந்து கொண்ட நான் அவருடனான நட்பை முறித்துக் கொண்டதால் பழிவாங்கும் நோக்கத்தில் மார்பிங் செய்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார் ஓவியா.

MUST READ