Homeசெய்திகள்சினிமாஎன் பேரனும் சினிமாவுக்கு வந்திட்டாரு… இயக்குனர் கஸ்துாரிராஜா குஷி

என் பேரனும் சினிமாவுக்கு வந்திட்டாரு… இயக்குனர் கஸ்துாரிராஜா குஷி

-

குணா சுப்ரமணியன் இயக்கத்தில் நட்டி நடிக்கும் சீசா படத்தின் படவிழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கஸ்துாரிராஜா கலந்துகொண்டார்.
விழாவில் அவர் பேசியது, ‘நான், என் மகன்கள் செல்வராகவன், தனுசை தொடர்ந்து, இப்போது 3 தலைமுறையாக என் பேரனும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். தனுஷ் இயக்கும் நிலவுக்குஎன்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்துவிட்டார். இந்த அளவுக்கு நாங்கள் நல்லா இருக்க, பல தயாரி்ப்பாளர்கள் காரணம். இந்த படத்தை கூட ஒரு டாக்டர்தான் தயாரிக்கிறார். அவருக்கு நன்றி. இந்த சினிமாவில் சம்பாதித்தவர்கள், இங்கேதான் மீண்டும், மீண்டும் பணத்தைப் போடுவார்கள். சினிமாவில் மட்டுமல்ல, பல விஷயங்களில் ஜெயிப்பதை தடுப்பது குடும்ப கஷ்டம்தான். சினிமாவில் அதிகபேர் குடும்ப கஷ்டத்தால் திணறியிருக்கிறார்கள். ஆனால், தகுதியானவர்களை விட சினிமா கை விடாது.

நான் 200% நாட்டுப்புறத்தான். 1978களின் இறுதியில் மதுரையில் இருந்து சென்னை வந்தேன். எனக்கு எதுவுமே தெரியாது. அப்போது பஸ்சில் மெட்ராஸ் போர்டு பார்த்து டக்கென கீழே இறங்கிவிட்டேன். பக்கத்தில் இருந்தவர்களிடம் அட்ரஸ் கேட்டேன். இதுக்கு இன்னும் 20 கிலோ மீட்டர் போகணும். இது வண்ணாரபேட்டை, நீ தாம்பரத்தில் இ றங்கிவிட்டாய் என்றார்கள். எனக்கு புரியவி்ல்லை. கையில் 1 ரூபாய்தான் இருந்தது. அதை வைத்து பஸ் பிடித்து வண்ணாரபேட்டை போனேன். அங்கே அட்ரஸ் தெரியவி்லை. ஒரு ரிக்‌ஷாகாரர் 50பைசா கேட்டார். அவ்வளவு இல்லை என்றேன். என்னை திட்டிக்கொண்டே அட்ரசில் இறங்கிவிட்டார்.

அப்போது என் மனைவி, குழந்தை ஊரில் இருந்தார்கள். சென்னையில் இருந்து சம்பாதித்து அனுப்ப வேண்டிய சூழ்நிலை. இப்படிதான் என் சினிமா வாழ்க்கை தொடங்கியது. ஆரம்பத்தில் நான் சினிமாவுக்கு முயற்சி செய்யவில்லை. ஆனால், அது என்னை தேர்ந்தெடுத்துக்கொண்டது. அடுத்து சினிமாவில் ஜெயித்தேன். சினிமா மாதிரி வேறு எங்கேயும் அனுபவிக்க முடியாது. சினிமா இன்றைக்கு மாறிவிட்டது. இன்றைக்கு யாரையும் வேலை வாங்க முடியலை. பல தயாரிப்பாளர்கள் கண்ணீர் விடுகிறார்கள். 50 லட்சம் செலவு செய்தால், 15லட்சம்தான் சினிமாவுக்கு போகிறது. என் மகன், என்னை சினிமா எடுக்க சொல்கிறார்கள். நான் எடுப்பதில்லை.

அந்த காலத்தில் பாடல்கள் அருமையாக இருந்தது. இன்று எல்லாமே மாறிவிட்டது. நானெல்லாம் 39 வயதில்தான் சினிமாவில் இயக்குனர் ஆனேன். ஆனால், அந்த சமயத்தில் எனக்கு இளையராஜா, ராஜ்கிரண் என இரண்டுபேர் கிடைத்தார்கள். என் ராசாவின் மனசிலே பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தை மக்கள் ரசித்தார்கள்.அந்த மாதிரி கதையை இன்றைக்கு ரசிப்பார்களா என தெரியவில்லை. சீசா கதை வித்தியாசமாக இருக்கிறது. அதை நட்டி என்னிடம் விரிவாக சொன்னார். உண்மையில் நல்ல கதை. அது மக்களிடம் போய் சேர வேண்டும் ’’ என்றார்.

MUST READ