நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் அதில் பின்னிப்பெடலெடுத்து விடுவார். மேலும் இவர் இரட்டை வேடங்களிலும், மூன்று வேடங்களிலும் நடித்து கலக்கி இருக்கிறார். தற்போது இவர் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் விடாமுயற்சி திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதியும் குட் பேட் அக்லி 2025 ஏப்ரல் 10ஆம் தேதியும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை வென்றார் அஜித். அதன் பின்னர் அடுத்த கார் பந்தயத்திற்கு தயாராகி வருகிறார்.
#AjithKumar‘s Latest video..❣️ Fan Sings A Song From Kandukondain Kandukondain..💥 That Surprise Reaction of AK when the fan told his name..🤩pic.twitter.com/E0nB5bcvfy
— Laxmi Kanth (@iammoviebuff007) January 25, 2025
இந்நிலையில்தான் நடிகர் அஜித்தின் ரசிகர் ஒருவர் அஜித்திடம் அவருடைய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி அசத்தியிருந்தார். அப்போது அஜித் அந்த ரசிகருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு உங்கள் பெயர் என்ன என்று கேட்கும் போது, அந்த ரசிகர் என் பெயர் அஜித் என்று கூறினார். தன்னுடைய ரசிகரின் பெயரும் அஜித் என்பதை கேட்டு மிகவும் க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்தார் அஜித். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.