Homeசெய்திகள்சினிமாஅவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.... 'கூலி' படம் குறித்து ஸ்ருதிஹாசன்!

அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை…. ‘கூலி’ படம் குறித்து ஸ்ருதிஹாசன்!

-

- Advertisement -

நடிகை ஸ்ருதிஹாசன் கூலி படம் குறித்து பேசி உள்ளார்.அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.... 'கூலி' படம் குறித்து ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசன் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 3, புலி, பூஜை ஆகிய படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.... 'கூலி' படம் குறித்து ஸ்ருதிஹாசன்!அதன்படி தற்போது இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன், கூலி படம் குறித்து பேசி உள்ளார்.அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.... 'கூலி' படம் குறித்து ஸ்ருதிஹாசன்! அதன்படி அவர் பேசியதாவது, “கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பது சிறந்த அனுபவமாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்திலும் கூலி படப்பிடிப்பில் இருப்பது உற்சாகத்தை தருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அவருடைய படங்கள் எனக்கு பிடிக்கும். ரஜினியுடன் இணைந்து நடிக்கும் போது அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ