Homeசெய்திகள்சினிமாசூப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்🔥... உறுதி செய்ய மிஷ்கின்!

சூப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்🔥… உறுதி செய்ய மிஷ்கின்!

-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக இயக்குனர் மிஷ்கின் உறுதி செய்துள்ளார்.

தற்போது இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக சினிமாடிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கி இந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ்.

rajini-and-lokesh.jpg

லோகேஷ் இயக்கத்தில் நடிக்க டோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகர்கள் வரிசை கட்டி நிற்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. தற்போது லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

அந்தப் படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் புதிய படத்தை இயக்கயிருப்பதாகவும் அதற்காக ரஜினி கதை கேட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்த தகவல் உண்மையா இல்லையா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் உண்மை தான் என்று உறுதி செய்த்துள்ளார்.

“லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ரஜினி  சாரே கூப்பிட்டு என்னை வச்சு ஒரு படம் டைரக்ட் பண்ணுங்க என்று சொல்றதெல்லாம் லோகேஷுக்கு கிடைத்த பெரிய பெருமை” என்று தெரிவித்துள்ளார். சூப்பர் ஹிட் காம்போ இணைய இருப்பதாய் அடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

MUST READ