Homeசெய்திகள்சினிமாபிரபாஸின் புஜ்ஜி காரில் ரவுண்டு போன நாக சைதன்யா

பிரபாஸின் புஜ்ஜி காரில் ரவுண்டு போன நாக சைதன்யா

-

பிரபாஸின் புஜ்ஜி காரில் பிரபல நடிகர் நாக சைதன்யா ஓட்டிச் சென்றார்.

தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வரும் புதிய திரைப்படம் ப்ராஜெக்ட் கே. அதாவது கல்கி 2898 AD. சலார் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான, வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் பைரவா என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். படத்தில் புஜ்ஜி ரோபோ எனும் கதாபாத்திரமும் இணைந்துள்ளது. இதற்கு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்துள்ளார். மேலும், படத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

https://x.com/i/status/1795105107836596312

அண்மையில் இந்த கார் ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐதராபாத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், பிரபல பார்முலா கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன் ஆகியோரும் இந்த புஜ்ஜி காரை ஓட்டிச் சென்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்

MUST READ