Homeசெய்திகள்சினிமாராஷ்மிகாவுக்கு ஆதரவு கரம் நீட்டும் நட்சத்திரங்கள்

ராஷ்மிகாவுக்கு ஆதரவு கரம் நீட்டும் நட்சத்திரங்கள்

-

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மட்டுமன்றி தற்போது இந்தியிலும் அனிமல் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக சின்மயின் கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கும் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உண்மையில் இருப்பவர் ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண். இவருடைய வீடியோவை ராஷ்மிகா மந்தனா போல டீப் பேக் முறையில் மாற்றி சமுக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதற்கு வேதனை தெரிவித்து ராஷ்மிகா இணையத்தில் பதிவிட்டிருந்தார். இச்செய்தி வைரலாக, அமிதாப் பச்சன், மிருணாள் தாகூர் ஆகியோரும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ