Homeசெய்திகள்சினிமாபாலிவுட்டில் நடிக்கும் திட்டம் இல்லை... நடிகர் நாக சைதன்யா உறுதி...

பாலிவுட்டில் நடிக்கும் திட்டம் இல்லை… நடிகர் நாக சைதன்யா உறுதி…

-

பாலிவுட் திரையுலகில் நடிக்கும் திட்டம் இல்லை என்று பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

டோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வரும் வரும் நடிகர் நாகர்ஜூனாவின் மகன் தான் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக கஸ்டடி திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி இருந்தார். இதனிடையே, நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து கடந்த 2017 இல் திருமணம் செய்து கொண்டனர்.

அதை தொடர்ந்து சமந்தா ஒரு பக்கமும் நாக சைதன்யா ஒரு பக்கமும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். தற்போது சாய் பல்லவியுடன் இணைந்து தெலுங்கில் புதிய படத்தில் நாக சைதன்யா நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் பாலிவுட்டில் நடிப்பது குறிித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அதுபோன்ற திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார். நல்ல படங்கள் இந்தியில் டப் செய்யப்படுகின்றன என்றார். இவர் பாலிவுட்டில், லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ