தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. அதேபோல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர் நடிகை சமந்தா. இவர்கள் இருவரும் கடந்த 2017-இல் இரு விட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் ஒரு சில காரணங்களால் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்கை முடிவுக்கு வந்தது. அதன்படி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றனர். இருவரின் பிரிவிற்கும் உண்மையான காரணம் எது என்பது இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தான் தெலுங்கானா மந்திரி கொண்டா சுரேகா, சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு கே.டி. ராமராவ் தான் காரணம் எனவும் அவர் செய்த விஷயங்களால் தான் பல நடிகைகள் தெலுங்கு சினிமாவை விட்டு போய்விட்டார்கள் எனவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் நாகார்ஜுனா தெலுங்கானா மந்திரி சுரேகாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “மந்திரி கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா பிரபலங்களின் வாழ்க்கையை, உங்களின் எதிரிகளை விமர்சிக்க பயன்படுத்தாதீர்கள். மற்றவர்களின் தனி உரிமையை தயவு செய்து மதியுங்கள். எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை. உடனடியாக இந்த உங்கள் கருத்துக்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு மந்திரி சுரேகாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நாகார்ஜுனா.
Disgusting to see politicians thinking that they can get away talking any kind of nonsense. When your words can be so irresponsible it’s stupid of us to expect that you will have any responsibility for your people. It’s not just about actors or cinema. This is not abt any…
— Nani (@NameisNani) October 2, 2024
அதேபோல் நடிகர் நானி, “எத்தகைய முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளை பார்க்கவே இல்லை அசிங்கமாக இருக்கிறது. உங்களுடைய கருத்துக்கள் பொறுப்பற்றதாக இருக்கும் போது, உங்களுடைய மக்கள் மீது உங்களுக்கு ஏதாவது பொறுப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பதை எங்களுடைய முட்டாள்தனம். இது சினிமா , நடிகர்கள் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமல்ல. இது எந்த அரசியல் கட்சிக்கும் பொருந்தாதது. மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர் செய்தியாளர்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரம் அற்ற கருத்துக்களை பேசுவது சரி என்று நினைப்பதும் தவறு. உங்களுடைய இந்த செயல் நம் சமூகத்தை மோசமாக பிரதிபலிக்கும். இதனை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.