Homeசெய்திகள்சினிமாதிருமணத்திற்கு பின் ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாக சைதன்யா - சோபிதா தம்பதி!

திருமணத்திற்கு பின் ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாக சைதன்யா – சோபிதா தம்பதி!

-

- Advertisement -

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா தம்பதியினர் தங்களின் திருமணத்திற்கு பிறகு ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.திருமணத்திற்கு பின் ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாக சைதன்யா - சோபிதா தம்பதி!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனாவின் மகனும் பிரபல நடிகருமான நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாக சைதன்யா - சோபிதா தம்பதி!இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களிலேயே இவர்களது திருமண உறவு முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். திருமணத்திற்கு பின் ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாக சைதன்யா - சோபிதா தம்பதி!அதன்படி இருவருமே பல இடங்களுக்கு டேட்டிங்க் சென்று வந்தனர். இந்நிலையில் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா ஆகிய இருவரும் இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெற்றது.திருமணத்திற்கு பின் ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாக சைதன்யா - சோபிதா தம்பதி! இந்நிலையில் திருமண தம்பதிகளான நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவரும் தங்களின் திருமணத்திற்கு பின்னர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் மல்லண்ணா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து புதுமண தம்பதிகள் சாமிக்கு ருத்ராபிஷேகம் செய்த நிலையில் பூஜைக்கு பின் அதிகாரிகள் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.மேலும் நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவுடன் இணைந்து நடிகர் நாகார்ஜுனாவும் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ