Homeசெய்திகள்சினிமாநயன்தாராவை தொடர்ந்து நெட்பிளிக்ஸில் வெளியாகும் நாக சைதன்யாவின் திருமண வீடியோ!

நயன்தாராவை தொடர்ந்து நெட்பிளிக்ஸில் வெளியாகும் நாக சைதன்யாவின் திருமண வீடியோ!

-

- Advertisement -

நயன்தாராவை தொடர்ந்து நாக சைதன்யாவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா.நயன்தாராவை தொடர்ந்து நெட்பிளிக்ஸில் வெளியாகும் நாக சைதன்யாவின் திருமண வீடியோ! இவர் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் தற்போது தண்டேல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

அதாவது நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் ஒரு சில காரணங்களால் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண உறவு முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். இருவரும் டேட்டிங் செல்வது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தன. நயன்தாராவை தொடர்ந்து நெட்பிளிக்ஸில் வெளியாகும் நாக சைதன்யாவின் திருமண வீடியோ!கடந்த ஆகஸ்ட் மாதம் நாக சைதன்யா மற்றும் துலிபாலா ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. மேலும் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாக சைதன்யா – சோபிதா துலி பாலாவின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ