நாக சைதன்யா, சோபிதா துலிபாலா ஜோடிக்கு நித்தியதார்த்தம் நடந்து முடிந்தது.
தெலுங்கில் ஸ்டார் நடிகராக வலம் வரும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கஸ்டடி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அதை தொடர்ந்து தண்டேல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நாக சைதன்யா. இதற்கிடையில் இவர் கடந்த 2017ல் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு விட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்று இருந்தாலும் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண உறவு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்தது. அதேசமயம் நாக சைதன்யாவும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சோபித்தா துலிபாலாவும் காதலித்து வருகின்றனர் என்று கிசு கிசுக்கப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் இந்த தகவலை உறுதி செய்யாத நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) இருவரின் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.