Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுன் கைது குறித்த கேள்வி.... நாக சைதன்யாவின் பதில் என்ன?

அல்லு அர்ஜுன் கைது குறித்த கேள்வி…. நாக சைதன்யாவின் பதில் என்ன?

-

- Advertisement -

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் உருவாகியிருந்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டுவரப்பட்டது. அல்லு அர்ஜுன் கைது குறித்த கேள்வி.... நாக சைதன்யாவின் பதில் என்ன?இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதே சமயம் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை காண வந்த ரேவதி என்ற பெண் பலியான விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் திரை உலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யாவிடம் அல்லு அர்ஜுனின் கைது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அல்லு அர்ஜுன் கைது குறித்த கேள்வி.... நாக சைதன்யாவின் பதில் என்ன?அதற்கு நாக சைதன்யா, “அப்படி நடந்திருக்கவே கூடாது. அது துரதிஷ்டவசமானது. ஆனால் இதுதான் வாழ்க்கை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எவராலும் கணிக்க முடியாது” என்று பதிலளித்துள்ளார்.

நாக சைதன்யா தற்போது தண்டேல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ