நடிகர் நாக சைதன்யா தன்னுடைய திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் விற்கப்பட்டது தொடர்பாக பரவி வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் நாக சைதன்யா தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் தற்போது தண்டேல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யாவிற்கும், நடிகை சோபிதா துலி பாலாவிற்கும் வருகின்ற டிசம்பர் மாதம் 4ஆம் திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இது நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆவணப்படமாக வெளியானதை போல் நாக சைதன்யாவின் திருமண வீடியோவும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பப்படும் எனவும் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. என் நிலையில் இது தொடர்பாக நடிகர் நாக சைதன்யா கூறியிருப்பதாவது, “இந்த தகவல் தவறானது. அதுபோன்ற எந்த ஒப்பந்தமும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் போடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.