Homeசெய்திகள்சினிமாநாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான தண்டேல் பட பர்ஸ்ட் லுக்!

நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான தண்டேல் பட பர்ஸ்ட் லுக்!

-

நாகசைதன்யா தமிழில் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் கஸ்டடி . வெங்கட் பிரபு இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.

அதைத் தொடர்ந்து நாக சைதன்யா, கார்த்திகேயா 1 மற்றும் கார்த்திகேயா 2 படங்களை இயக்கிய சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் தனது 23 வது படத்தில் நடிக்க உள்ளார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மீனவர்களைப் பற்றிய கதை களத்தில் உருவாக இருக்கிறது. நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான தண்டேல் பட பர்ஸ்ட் லுக்!இந்த படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். லவ் ஸ்டோரி படத்திற்கு பிறகு நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் இணைந்து NC23 படத்தில் நடிக்கின்றனர். இது குறித்த அறிவிப்பை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் மீனவ சமுதாய இளைஞனாக ஒரு முரட்டுத்தனமான லுக்கில் நாக சைதன்யா இருக்கிறார். இதற்கு முன்னர் பார்த்திராத வகையில் முரட்டுத்தனமான லுக்கில் நாக சைதன்யா இருக்கிறார். இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.வெறித்தனமாக ரிலீஸ் ஆகிய நாகசைதன்யாவின் தண்டேல் பட ஃபர்ஸ்ட் லுக்! நாளை தனது 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நாக சைதன்யாவின் பிறந்த நாள் பரிசாக இந்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு தண்டேல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

MUST READ