நாக சைதன்யாவின் தண்டேல் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வந்த படம் தண்டேல். இந்த படத்தினை கார்த்திகேயா 1, கார்த்திகேயா 2 ஆகிய படங்களை இயக்கிய சந்தூ மொண்டெட்டி இயக்கி இருந்தார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மீனவர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நாக சைதன்யாவின் சினிமா கேரியரில் இந்த படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்ததுடன் மிகப்பெரிய ஹிட் படமாகவும் அமைந்திருக்கிறது. இதில் சாய் பல்லவியின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் (இந்த வாரம்) வருகின்ற மார்ச் 7 அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -