Homeசெய்திகள்சினிமாகார்த்திகேயா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நாக சைதன்யா!

கார்த்திகேயா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நாக சைதன்யா!

-

- Advertisement -
kadalkanni

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

நாக சைதன்யா தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவருடன் கிரித்தி செட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, சம்பத்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசை அமைத்திருந்தனர். இந்த படம் நாக சைதன்யாவிற்கு எதிர்பாராத வெற்றியை தராததால் தனது அடுத்த படத்தில் அந்த வெற்றியை திரும்பப் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் நாகசைதன்யா தனது அடுத்த படத்தை இயக்குனர் சந்தூ மொண்டேடியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற கார்த்திகேயா படத்தை இயக்கியவர்.
இவர்கள் இணைய இருக்கும் இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நாக சைதன்யா மீனவன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. மேலும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ