Homeசெய்திகள்சினிமாயுவன் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் அடுத்த பாடல்.... ரிலீஸ் எப்போது?

யுவன் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் அடுத்த பாடல்…. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

யுவன் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் அடுத்த பாடல்.... ரிலீஸ் எப்போது?நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்திருந்த ஆனந்த் இயக்கி உள்ள படம் தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இந்தப் படத்தில் ஆர் ஜே விஜய், பவானி ஸ்ரீ, KPY பாலா, இர்பான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மசாலா பாப்கான் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். ஏ. எச் காஷிப் இசையமைத்துள்ளார்.
வெவ்வேறு திறமைகளை உடைய நண்பர்களின் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான நீ ஏன் எனும் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடல் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி நாளை வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே வெளியான பக்கோடா எனும் முதல் பாடலை ஹிப் ஹாப் ஆதியும் மற்றும் ஆழாதே எனும் இரண்டாம் பாடலை தனுஷும் பாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ