Homeசெய்திகள்சினிமாநானி நடிக்கும் புதிய படம்..... கிளிம்ப்ஸ் வீடியோவுடன் வெளியான டைட்டில்!

நானி நடிக்கும் புதிய படம்….. கிளிம்ப்ஸ் வீடியோவுடன் வெளியான டைட்டில்!

-

நடிகர் நானி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நானி, சமீபத்தில் தசரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஸ்ரீகாந்த் ஒடேலா எழுதிய இயக்கிய இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து நானி தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். ‘ஹாய் நான்னா’ என்று இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

சீதாராமம் படத்தின் மூலம் பிரபலமான மிர்னாள் தாகூர் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சவுரவ் இயக்குகிறார். இந்த படத்திற்கு சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய ஹேசம் அப்துல் வாஹப் இசையமைக்கிறார். VYRA என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம்
வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போது இந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு,மலையாளம் ,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த வீடியோ படத்தின் முன்னோட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ