Homeசெய்திகள்சினிமாநானி, மிர்ணாள் தாகூர் கூட்டணியின் ஹாய் நான்னா.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நானி, மிர்ணாள் தாகூர் கூட்டணியின் ஹாய் நான்னா…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

நானி, மிர்ணாள் தாகூர் கூட்டணியின் ஹாய் நான்னா.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் தசரா. இப்படத்தை தொடர்ந்து நானி ஹாய் நான்னா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக சீதராமம் படத்தின் மூலம் கவனம் பெற்ற மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சௌர்யுவ் இயக்க வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹேசம் அப்துல்லா இதற்கு இசையமைத்துள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்பா மற்றும் மகளுக்கு இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை பின்னணியாக கொண்டு கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. நல்ல ஒரு பீல் குட் படமாக ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக இந்த படம் உருவாகி இருந்தது. நானி, மிர்ணாள் தாகூர் கூட்டணியின் ஹாய் நான்னா.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!அந்த வகையில் இந்த படம் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று 50 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் இப்படம் 2024 ஜனவரி 4ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ