கடந்த 2021 ஆம் ஆண்டு சூர்யா, மணிகண்டன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் டிஜே ஞானவேலுக்கும் பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து டிஜே ஞானவேல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் டி ஜே ஞானவேல் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டிஜே ஞானவேல் அடுத்ததாக தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் புதிய படத்தை இயக்க இருக்கிறாராம். ஏற்கனவே வேட்டையன் திரைப்படத்தில் நானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் வேட்டையன் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த சமயத்திலேயே டிஜே ஞானவேல் நானிக்காக ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்து விட்டதாகவும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே டிஜே ஞானவேல், நானி கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் தெலுங்கு திரைப்படமாக உருவாக உள்ளதா அல்லது தமிழ்த் திரைப்படமாக உருவாக உள்ளதா என்பது தொடர்பான அப்டேட்டுகளும், படம் சம்பந்தமான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் நானி, ஹாய் நான்னா படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் சனிக்கிழமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.