ஹிட் மூன்றாம் பாகத்தில் நடிக்கும் நானி… மற்றொரு படத்திலும் ஒப்பந்தம்..
- Advertisement -
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, நடிகர் நானி 31-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சூர்யாவின் சனிக்கிழமை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சரிபோதா சனிவாரம் என்ற பெயரில் வெளியாகிறது. அடேட சுந்தரா படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயே இப்படத்தை இயக்குகிறார். டிடிவி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நானி கமிட்டாகி இருக்கிறார். ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்தில் நானி நடிக்க உள்ளார் அதே சமயம், தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடிலாவின் அடுத்த படத்திலும் நானி நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு ஒரே சமயத்தில் நடைபெற இருப்பதால், இரண்டிலுமே பங்கேற்க நானி திட்டமிட்டு உள்ளாராம்.