தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் தசரா. இப்படத்தை தொடர்ந்து நானி, ஹாய் நான்னா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சௌர்யுவ் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தை வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹேசம் அப்துல்லா இசையமைத்துள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்பா மற்றும் மகளுக்கு இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் முதல் நாளில் 10.7 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியான இந்த படம் 10 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொண்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் பட குழுவினர் ஹாய் நான்னா படத்தின் வெற்றியை சிறப்பாக கொண்டாடி இருந்தனர். அதுமட்டுமில்லாமல் BOOK MY SHOW இல் மட்டுமே ஒரு மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் இப்படம் 100 கோடி வசூலை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.