நானி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் நானி தமிழிலும் சில படங்களில் நடித்த ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் சூர்யாவின் சனிக்கிழமை எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் நானி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு HIT : The first case திரைப்படம் வெளியானது. பின்னர் 2022 ஆம் ஆண்டு HIT : The Second case எனும் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் HIT : The Third case என்ற மூன்றாம் பாகத்தில் நடிகர் நானி நடிக்கிறார். இந்த படத்தினை வால் போஸ்டர் சினிமா நிறுவனமும் அன்அனிமஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படம் நானியின் 32 வது படமாக உருவாகிறது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தினை சைலேஷ் இயக்குகிறார். மேலும் அந்த அறிவிப்பு வீடியோவில் இந்த படமானது 2025 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.