நானி நடிக்கும் தி பாரடைஸ் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதேசமயம் ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, ஹாய் நன்னா, சரிபோதா சனிவாரம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் ஹிட் 3 படத்தினையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் தசரா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியிருந்த நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்து தி பாரடைஸ் எனும் திரைப்படம் உருவாகிறது. இந்த படம் நானியின் 33 வது படமாகும். இந்த படத்தில் நானியுடன் இணைந்து சோனாலி குல்கர்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தினை சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இந்த படமானது 2026 மார்ச் 26 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் நானி மிரட்டலான லுக்கில் காண்பிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் இந்த வீடியோவின் மூலம் இப்படமானது ராவான கதைக்களத்தில் உருவாகி வருவது போல் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.