Homeசெய்திகள்சினிமாநானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

நானி நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சிறந்த கதையமசம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். அந்த வகையில் இவர் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தது. இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் தமிழில் இவர் வெப்பம், நான் ஈ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகி இருந்த ஹாய் நான்னா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி கண்டது. அதைத்தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்திருந்த சரி போதா சனிவாரம் எனும் திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் திரையிடப்பட்டது. இந்த படத்தினை விவேக் ஆத்ரேயா இயக்கியிருந்த நிலையில் டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. ஜேக்ஸ் பிஜாய் இதற்கு இசையமைத்திருந்தார். நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!ஜி முரளி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார். படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருந்தார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்த இந்த படம் வருகின்ற செப்டம்பர் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ