நெப்போலியன் மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
நடிகர் நெப்போலியன் 90 காலகட்டங்களில் இருந்து தனது திரைப் பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் நெப்போலியன் அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இதற்கிடையில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள கிராமத்தில் நாட்டு வைத்தியம் செய்து தனது மகனுக்கு சிகிச்சை அளித்து வந்தார் நெப்போலியன். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெப்போலியன் மகன் தனுஷிற்கும் அக்ஷயா என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று (நவம்பர் 7) ஜப்பானில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில், நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், சுஹாசினி, மீனா, குஷ்பூ, கார்த்தி, பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். அதேசமயம் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் வீடியோக்களின் மூலமும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.