தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. அன்னபூரணி படத்திற்குப் பிறகு மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. அதே சமயம் தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐசி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
நயன் – விக்கி இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அன்று முதல் இன்று வரை நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தங்களது குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி, அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தங்களது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இருவரும் இணைந்து பல புனித ஸ்தலங்களுக்கு சென்று வழிபடக் கூடியவர்கள்.
அந்த வகையில் நயன் – விக்கி தம்பதி கன்னியாகுமரியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மாலை நயன், விக்கி இருவரும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தரிசனம் செய்ததை தொடர்ந்து நாகர்கோவிலில் இருக்கும் நாகராஜா கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தனர்.
மேலும் சாமி தோப்பில் உள்ள அய்யான் வைகுண்டசாமி கோவிலுக்கும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கும் சென்று சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்கு ரசிகர்களுடன் நயன் விக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -