Homeசெய்திகள்சினிமாலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல்!

-

- Advertisement -

நடிகை நயன்தாராவின் 39 வது பிறந்தநாள் இன்று.

தொடக்கத்தில் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். இவர் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். மாடலிங்கில் தொடங்கிய இவரின் திரைப்பயணம் தற்போது பாலிவுட் வரை சென்றுள்ளது. இவரின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவிற்காக நயன்தாரா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல்!

சின்னத்திரை தொகுப்பாளராகவும், மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா முதலில் சில மலையாள படங்களில் நடித்து வந்தார். தமிழில் ஐயா படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தபடியாக இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி பட வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகுதான் நயன்தாராவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. சந்திரமுகி படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் காரணமாகவே நயன்தாரா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு சிவகாசி, கஜினி, பில்லா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ரஜினி, சூர்யா, விஜய், அஜித், விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நயன்தாரா பணியாற்றி இருக்கிறார்.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல்!

பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் சில படங்களில் புகழும் வண்ணம் நடித்துள்ளார். எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அப்படியே பொருந்தி போய்விடுவார். அந்த வகையில் தான் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் இவர் இணைந்து நடித்த ஸ்ரீ ராமராஜ்யம் திரைப்படத்தில் சீதையாக நடித்து ரசிக்க வைத்திருப்பார். தமிழில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மனாகவும் நடித்திருந்தார். இவ்வாறு மற்ற நடிகைகளை ஓரம் கட்டி தனக்கென தனி ஒரு அடையாளத்தையும், சிம்மாசனத்தையும் ஏற்படுத்தி தமிழ் சினிமாவில் தனது ஸ்டார் அந்தஸ்தை நிலை நிறுத்தினார். அதன் பிறகு மாயா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், டோரா உள்ளிட்ட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார்.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல்!

ஆரம்பத்தில் நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் கடந்து தற்போது ஒரு மேஜிக் ராணியாக ரசிகர்களின் மனதில் நிற்கிறார்.

நயன்தாரா, அறிமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பார். ஹீரோவாக இருந்தாலும் சரி, வில்லனாக இருந்தாலும் சரி, காமெடியனாக இருந்தாலும் சரி, எந்த ஒரு நடிகராக இருந்தாலும் கூட பாரபட்சம் பார்க்காமல் அவருடன் இணைந்து நடிப்பார்.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல்! மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்தியில் அறிமுகமானார். இந்தியில் அறிமுகமான முதல் படமே ( ஜவான் ) நயன்தாராவிற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இந்த ஜவான் திரைப்படம் தான் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்துள்ளது எனலாம்.

நடிகை நயன்தாரா ஒரு சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் நயன் ஸ்கின் என்ற ஸ்கின் கேர் பிசினஸையும் தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல்! மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது 39 ஆவது பிறந்த நாளை தன் கணவர் விக்னேஷ் சிவன், தன் இரட்டை மகன்களான உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்விக் N சிவன் ஆகியோருடன் இணைந்து சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இவ்வாறு சின்னத்திரையில் இருந்து லேடி சூப்பர் ஸ்டார், தொழிலதிபர் என அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் நடிகை நயன்தாராவிற்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.

MUST READ