நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். அதன்படி நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அன்னபூரணி. நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதற்கிடையில் நயன்தாரா மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை வளசரவாக்கத்தில், ஊட்டியின் செட் அமைக்கப்பட்டு தீவிரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நயன்தாரா மண்ணாங்கட்டி படப்பிடிப்பிற்கு, தனது இரட்டை குழந்தைகளையும் அழைத்து வருகிறாராம். நயன்தாராவின் அசிஸ்டன்ட் உட்பட குழந்தைகளை கவனிக்க ஐந்து பெண்கள் உடன் வருகின்றனராம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். எனவே நடிகை நயன்தாரா, இதற்காகவே படப்பிடிப்பை விரைவில் முடித்து விட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த மண்ணாங்கட்டி படத்தினை டியூட் விக்கி இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.